அதிரடியாக விலையை குறைத்த சாம்சங் நிறுவனம்!

டிரெண்டிங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போன் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்து இருக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் சாம்சங் கேலக்ஸி A53 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேமில் கிடைக்கிறது. தற்போது கேலக்ஸி A53 5ஜி மாடலின் விலையில் ரூ. 3 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டு இருக்கிறது.

மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட், உள்ளிட்ட தளங்களில் வாங்குவோருக்கு பொருந்தும்.

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A53 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 ஆகும்.

Samsung Galaxy A53 5G

விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 31 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 32 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு விட்டது.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் சாம்சங் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்து அசத்தல் தள்ளுபடி பெறலாம்.

சிறப்பம்சங்களை பொறுத்தவரை Samsung Galaxy A53 5G மாடலில் 6.5 இன்ச் இன்பினிட்டி ஒ sAMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், எலிவேடிங் கேமரா மாட்யுல், 64MP பிரைமரி கேமராவுடன், நான்கு கேமரா சென்சார்கள், 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வந்தாச்சு ஐ போன் 14 : செப்டம்பர் 7 வெளியீடு!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *