ஆஃபர்களை அள்ளிக் கொட்டும் சேம்சங் நிறுவனம்!

டிரெண்டிங்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்ஸ் செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறகிறது. இதனால், சேம்சங் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை அள்ளிக் குவித்துள்ளது. சேம்சங் நிறுவனம் தங்களது மொபைல் போன்களுக்கு 57 சதவிகிதம் வரை ஆஃபர்களை அறிவித்துள்ளது.

சேம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ மொபைல் போன், ரூ.31,999-க்கு ஆஃபர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6.4 இன்ச் டிஸ்பிளே உள்ள இந்த மொபைல் போனில், 12 எம்பி+12 எம்பி+8 எம்பி மூன்று கேமரா வசதி உள்ளது.

6 ஜிபி முதல் 8 ஜிபி ரேம் வசதி உள்ளது. இண்டர்னல் ஸ்டோரஜ் வசதி 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்ளது. மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வசதி உள்ளது.

samsung announces 57 discounts

சேம்சங் கேலக்ஸி எஸ் 22+ மொபைல் போன் ஆஃபர் விலையில் ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 6.6 இன்ச் டிஸ்பிளே உள்ள இந்த மொபைல் போனில் 50 எம்பி கேமரா வசதி உள்ளது.

சேம்சங் கேலக்ஸி எஃப்23 மொபைல் போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 750 ஸ்னாப் டிராகன் ஆக்டோகோர் பிராசஸ் கொண்ட இந்த மொபைல் போனில், 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் உள்ளது 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

சேம்சங் கேலக்ஸி எஃப் 13 ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 6000 எம்ஏஹெச் பேட்டரி வசதி உள்ள இந்த மொபைல் போன், 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

samsung announces 57 discounts

சேம்சங் கேலக்ஸி எஸ் 22+ மற்றும் கேலக்ஸி எஃப்23 ஆஃபர் இன்று (செப்டம்பர் 17) மதியம் ஒரு மணியளவிலிருந்து விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்21 எப்இ  செப்டம்பர் 19-ஆம் தேதி முதலும், கேலக்ஸி எஃப் 13 மொபைல் போன் செப்டம்பர் 22 முதலும் ஆஃபர் விலையில் விற்பனைக்கு வர உள்ளது.

செல்வம்

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் : சிறப்பம்சம், விலை நிலவரம் என்ன?

முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கவேண்டும் : ஓபிஎஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.