சம்பளத்துக்காக அடித்துக் கொள்கிறார்களா குக் வித் கோமாளிகள்?

டிரெண்டிங்

விஜய் டி.வி.யில் நடந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்துக்கு ஆசைப்பட்டுதான், இப்படி மோதிக் கொள்கிறார்கள் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளியின் 5வது சீசன் முடிவுக்கும் வந்துள்ளது.  5வது சீசன் டைட்டில் வின்னராக பிரியங்கா தேஷ்பாண்டே தேர்வாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு சீசனில் ஆங்கராக இருந்த மணிமேகலை  ஆங்கர் பொறுப்பில் இருந்து விலகினார். பிரியங்காவின் தலையீடு காரணமாகவே, நிகழ்ச்சியில் இருந்து மணி மேகலை வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் சம்பளத்துக்காகவே குக் வித் கோமாளியில் மோதல்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக கடந்த ஐந்து சீசன்களாக செயல்பட்டு வரும் ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இந்த சீசனில் இருந்து நிகழ்ச்சியின் ஆங்கராக மாறியிருந்த  மணிமேகலைக்கு ஒரு எபிசோடுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளமும் விஜய் டிவியின் முன்னணி பெண் ஆங்கராக பல ஆண்டுகளாக உள்ள பிரியங்காவுக்கு ஒரு எபிசோடுக்கு  இரண்டரை லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன.

விஜய் டிவியின் நிரந்தர ஆங்கரான  மாகாபா ஆனந்துக்கும் ஒரு எபிசோடுக்கு  இரண்டரை லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

கோமாளியாக இருந்தபோதிலும் கடந்த சீசனிலேயே ஆங்கராக மாறும் ஆசையை மணிமேகலை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். எப்படியாவது விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக மாறிவிட வேண்டும் என்கிற ஆசை மணிமேகலைக்கு  இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் முட்டுக்கட்டை போட்டதால் மணி மேகலைக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்களுக்குள் மோதல் மூண்டது. விளைவாக மணி மேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். சம்பளத்திற்காகவே  ஆங்கராக நிரூபிக்க  ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதிக் கொள்வதாக விஜய் டி.விக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு… வாய் திறந்த ஜெகன் மோகன் ரெட்டி

பேஜர் வெடிப்புக்கு பின்னணியில் வயநாட்டுக்காரர்? அதிர வைக்கும் தகவல்கள்!

 

+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *