செல்ல பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் சச்சின்

டிரெண்டிங்

சச்சின் டெண்டுல்கர் தனது இரண்டு செல்ல நாய்களான ஸ்பைக்கி மற்றும் மேக்ஸியுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் விலங்குகள் மீது குறிப்பாக நாய்கள் மீது கொண்டுள்ள பாசம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் தான் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

கடந்த மாதம், சச்சின் தான் வளர்த்து வரும் ஸ்பைக்கி மற்றும் மேக்ஸி என்ற இரு நாய்களுடன் பூங்காவில் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார்.

அத்துடன் “என் நண்பருடன் பூங்காவை சுற்றி வருவதை விட வேறு எதுவும் சிறப்பாக இல்லை” என பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ இதுவரை 20 லட்சத்திற்கு அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இந்நிலையில் அதேபோன்று தற்போதும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சச்சின். அதற்கு “இந்த இரண்டும் இல்லாத வீடு வீடாகவே இல்லை! என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CorujdRARe3/

இந்த வீடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 30 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

சச்சின் பதிவிட்ட இந்த வீடியோவுக்கு சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோர் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு பதில் அளித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராணுவ வீரர் கொலை : கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

கிராமத்து காமெடியில் தண்டட்டி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *