முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோவா கடற்கரையில் மீனவர்களுடன் நேரம் செலவிட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்டார். எனினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
நேற்று (நவம்பர் 8) ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ கோவாவில் உள்ள பெனாலிம் கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ளது.
பெனாலிம் கடற்கரையில் சச்சின் டெண்டுல்கர் அங்குள்ள உள்ளூர் மீனவர்களுடன் மீன்பிடிக்கும் அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். மீனவர்கள் மீன் பிடிப்பதைப் பார்த்து “இந்த அனுபவம் நம்பமுடியாதது, சுவாரஸ்யமான காலை” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்குச் சென்று திரும்பும் மீன்பிடி படகு ஒன்றைக் கரைக்கு இழுத்து வருகிறார். மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்த மீன்கள் அனைத்தையும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.
பிடித்துக் கொண்டுவரப்பட்ட மீன்களைச் சமைத்து உண்கிறார். இவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் “கோவாவில் மீனவர்களுடன் ஒரு சுவாரஸ்யமான காலை” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவிடப்பட்ட சற்று நேரத்திலேயே பல ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.
“லவ் யூ சச்சின் சார், இந்த பிரபஞ்சத்திலேயே எனக்குப் பிடித்த விளையாட்டு வீரர்”, ”நீங்கள் சிறந்தவர்”, “உங்கள் இதயம் அந்த கடலை போல மிகப் பெரியது” என்று பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
சச்சினின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மோனிஷா
இலங்கையில் உணவு பற்றாக்குறை: எச்சரிக்கும் ஐ.நா!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!