சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா பவார் திருமணம் விமரிசையாக நேற்று (ஜூன் 3) நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ருத்துராஜ் கெய்க்வாட். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.

24 வயதாகும் ருத்துராஜ் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்காக விளையாடி 590 ரன்கள் குவித்துள்ளார்.

ஐ.பி.எல் மற்றும் முதல்தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ருத்துராஜ் வரும் 7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் திருமணம் காரணமாக தன்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் அவர் கேட்டுக் கொண்ட நிலையில் பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் நேற்று ருத்துராஜ் கெய்க்வாட் , கிரிக்கெட் வீராங்கனையும், தோழியுமான உட்கர்ஷா பவாரை திருமணம் செய்து கொண்டார்.

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் ஓட்டவில் விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக விளையாட்டு வீர்ர்களும் கலந்துகொண்டனர்.

தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை ருத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா பவார் தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்வீடனில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்னை வருகை!