கிச்சன் கீர்த்தனா: ரஷ்யன் சாலட்!

Published On:

| By Kavi

பலருக்கும் வார இறுதி நாளில் வெறும் திரவ உணவாகவே சாப்பிட்டால் போதும் என்று தோன்றும். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க திரவ உணவுகள் மட்டுமன்றி நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு சரியான தீர்வு சாலட் வகைகள். இந்த வார வீக் எண்டை ரஷ்யன் சாலட் செய்து ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.

முதலில் சாலட் க்ரீம் தயாரிக்க…

என்ன தேவை?

ஃபிரெஷ் க்ரீம் – 2 கப்
உப்பு – சிறிதளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன்
வெள்ளை வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
குளிர்ந்த பால் – ஒரு கப்

குளிர்ந்த பாலுடன், ஃபிரெஷ் க்ரீமை மெதுவாகக் கலந்துகொள்ளவும். பின், உப்பு, மிளகுத்தூள், கடுகுப் பொடி, வினிகர் ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.

கேரட் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
குடமிளகாய் – ஒன்று
வெள்ளரிக்காய் – ஒன்று

இவை அனைத்தையும் மெல்லியதாக வட்ட வட்டமாக ஸ்லைஸ் செய்யவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு…

உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன்
வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

இவற்றைச் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பைனாப்பிள் (துண்டாக நறுக்கியது) – ஒரு கப்
ஆப்பிள் (நீளமாக நறுக்கியது) – ஒரு கப்
விதையில்லாத திராட்சை பழங்கள் (கறுப்பு, பச்சை) – அரை கப்
ஆரஞ்சு சுளைகள் – அரை கப்

வால்நட் – சிறிதளவு கடைசியாக ஊற வைத்த காய்கறிகள், தயாராக உள்ள சாலட் க்ரீம், பழங்கள் முதலியவற்றைக் கலந்து சாலட் பரிமாறும் வாயகன்ற தட்டில் (Salad Platter) பரப்பி, சிறிதளவு வால்நட், பழங்கள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மட்டன் தோசை

கிச்சன் கீர்த்தனா : இறால் தொக்கு தோசை

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி… இடதுசாரிகளின் எதிர்காலம் என்ன? யார் இந்த கியர் ஸ்டாமர்?

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடா? – எடப்பாடிக்கு சக்கரபாணி பதில்!

கம்பி கட்டும் கதை: அப்டேட் குமாரு

காங்கிரஸ் கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share