பெங்களூருவில், பட்டப் பகலில் பி.எம்.டபிள்யூ கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பெங்களூருவில், பட்டப்பகலில் பைக்கில் வந்த திருடர்கள் இரண்டு பேர், நின்றுகொண்டிருந்த பி.எம்.டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததென்றும், கார் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்த பாபு என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்திருக்கிறது.
பின்னர், இதுதொடர்பாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொள்கையில் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
#WATCH | Rs 13 lakhs stolen from a parked car in Bengaluru on 20th October; case registered, say police.
(Video source: Bengaluru Police) pic.twitter.com/u8V4K5tGzI
— ANI (@ANI) October 23, 2023
தற்போது அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘பட்டப்பகலில், ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் பைக்குகள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ‘BMW X5’ கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது ஹெல்மெட்டுடன், முகக்கவசம் அணிந்து பைக்கில் வந்த ஒருவர் காரின் பின்புறம் தயாராக நின்றுகொண்டிருக்கிறார். இன்னொரு நபர் எதார்த்தமாக காரின் டிரைவர் சீட் கதவுக்கு அருகில் நிற்கிறார்.
பின்னர் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு திடீரென கார் கதவு கண்ணாடியை உடைத்த அந்த நபர், தலையை காரின் உள்ளே நுழைத்து பணம் வைக்கப்பட்டிருந்த கவரை எடுத்துக்கொண்டு பைக்கில் ஏறி சென்று விடுகிறார். இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் கூட, கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல்
டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்!
தீபாவளி புது டிரெஸும்… ஆன்லைன் ஆர்டரும்: அப்டேட் குமாரு
நிர்மலா, யோகி வரை செல்வாக்கு… கௌதமியை ஏமாற்றிய ஆல் இன் ஆல் அழகப்பன் பின்னணி!