ராயல் என்ஃபீல்டு பைக் 36 வருடங்களுக்கு முன்பு 18,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராயல் என்ஃபீல்டு பலவிதமான கிளாசிக் பைக்குகளை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 உள்ளது.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் விலை தற்போது ரூ.1.5 லட்சத்தில் தொடங்குகிறது. விலை அதிகம் என்றாலும் இந்த பைக்கை வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களும் உண்டு.
அப்படி அதிக விலை ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்குபவர்கள் மற்றும் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இந்த பைக் ரூ, 18,700-க்கு விற்பனை செய்யப்பட்ட பில் வைரலாகி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் பழைய பில்லில் ரூ.18,700 என அச்சிடப்பட்டிருந்த விலையைப் பார்த்த ரசிகர்கள் அசந்து போனார்கள்.
இந்த பில் தற்போது பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இணையத்தைச் சுற்றி வரும் அந்த பில்லில் அதன் தேதி 1986 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த பலரும் 18,700-க்கு விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்கா தற்போது 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
மோனிஷா
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு!
2023 புத்தாண்டு: கலைஞர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!