பேட்டிங்கா? பவுலிங்கா?: ரோகித் ஷர்மாவின் குழப்ப நொடிகள்!

Published On:

| By Monisha

rohit confused choose bating bowling

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்வதா, பேட்டிங்கை தேர்வு செய்வதா என்று குழம்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 18ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து இன்று(ஜனவரி 21) 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸ் போடும் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டாஸ் வென்ற ரோகித் ஷர்மா பந்துவீச்சா, பேட்டிங்கா என்று தேர்வு செய்ய வேண்டும். அப்போது ரோகித் எதனை தேர்வு செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டார்.

https://twitter.com/BCCI/status/1616702652506865666?s=20&t=92oxJjkIJva2mQ8YFKKZ9w

சிறிது நேரம் தன்னுடைய தலையில் கை வைத்து யோசித்து விட்டு பின்னர் “பவுலிங்” என்று கூறினார். இந்த நிகழ்வின் போது நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் அருகில் நின்று கொண்டு ரோகித்தின் செயலை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் சிரித்துக் கொண்டே கைகுலுக்கிக் கொண்டு மைதானத்தில் இருந்து அவரவர் அணிகளிடம் சென்றனர்.

2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்ற முனைப்போடு இந்திய அணி விளையாடி வருகிறது.

தற்போது வரை 16 ஒவர்கள் பந்து வீசப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்திற்கு 38ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.

குழப்பான சுழலில் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தாலும் இந்திய அணி அதிரடியான பந்துவீச்சு மூலம் நியூசிலாந்து வீரர்களை திணறவிடுகிறது.

மோனிஷா

இடைத்தேர்தல்: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய இளங்கோவன்

“வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது”-திருச்சி டிஐஜி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share