ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் மாத்திரையை விழுங்குபவரா நீங்கள்? ஜாக்கிரதை!

Published On:

| By christopher

Risk of self-medication practices

“காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி என்று ஏதேனும் ஒரு அசௌகர்யம் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருந்துக்கடைகளுக்குச் சென்று ஓவர் த கவுன்ட்டர் முறையில் மாத்திரைகளை வாங்கி விழுங்குகிறார்கள். நம் நாட்டில் சுயமருத்துவம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இது மிகவும் தவறு” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

எந்த மாத்திரையையும் மருத்துவரின் வழிகாட்டுதலின்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எல்லா மாத்திரைகளிலும் டோஸ் அளவு, கால வரையறை, உணவுக்கு முன்பா பின்பா என்பன போன்ற பல நுட்பமான விஷயங்கள் உள்ளன. நோயாளியின் உடல்நிலை, நோயின் சூழ்நிலை போன்றவற்றையும் கவனத்தில் கொண்டே மாத்திரையை மருத்துவர் தீர்மானிப்பார். நோயாளியைக் குணப்படுத்தும் முயற்சியின் வெவ்வேறு வடிவங்கள்தான் ஊசி, மாத்திரை, ட்ரிப்ஸ் எல்லாமே. சூழ்நிலையின் தேவையைப் பொறுத்து இந்தச் சிகிச்சைமுறைகள் மாறுபடும். இதில் ஒரே மருந்து மூன்றுவிதமாகவும் இருக்கும்.

உதாரணத்துக்கு, பாராசிட்டமால் என்பது ஊசியாகவும் இருக்கிறது. மாத்திரையாகவும் கொடுக்கிறோம். சிரப்பாகவும் வழங்கலாம். பாராசிட்டமாலை இன்ஜெக்‌ஷன் முறையில் நோயாளிக்குக் கொடுக்கும்போது உடலின் கிரகிப்புத்தன்மை (Absorption) வேகமாக இருக்கும். நாம் கொடுக்கிற மருந்து உடனடியாக உடலில் கலந்து நாம் எதிர்பார்க்கிற நல்ல விளைவையும் கொடுக்கும்.

இந்த நிலையில், “தன்னிச்சையாக மாத்திரைகள் உட்கொண்டால் அதன் பின்விளைவாக சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். அதேபோல் பழைய ப்ரிஸ்க்ரிப்ஷனை பயன்படுத்தியும் மாத்திரைகள் வாங்கி உண்பதும் தவறானது‘‘ என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : அதிமுக ‘கள ஆய்வுக்குழு’ கூட்டம் முதல் டெல்லி கணேஷ் உடல் தகனம் வரை!

கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் பேல்

மழைக்கால பரிதாபங்கள்… அப்டேட் குமாரு

பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? – எடப்பாடி பதில்!

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!