கணிதம் கட்டாயம் : ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

டிரெண்டிங்

பிரிட்டனில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணக்கு பாடம் கட்டாயம் என்ற பிரதமர் ரிஷி சுனக்கின் அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கிழக்கு லண்டனில் உள்ள ராணி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் நேற்று (ஜனவரி 4) 2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக பொதுமக்கள் முன் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ”தற்போது பிரிட்டனில் 16 முதல் 19 வயதுடையவர்களில் பாதி பேர் மட்டுமே கணிதத்தை படிக்கிறார்கள். 16 வயது வரை 60 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணக்குகள் கூட தெரியாத நிலை உள்ளன.

கணிதவியல் பாடம் குறித்த நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது இன்றைய கல்வி முறையில் அவசியமாக உள்ளது.

rishi sunak gets angry towards maths compulsory in britain decision

இன்றைய உலகத்தில் எங்கு பார்த்தாலும் அனைத்து வேலைகளிலும் தரவுகளும், புள்ளி விவரங்களுமே உள்ளன.

எனவே குழந்தைகளின் வேலையானது முன்பை விட அதிக பகுப்பாய்வு திறன் (analytical skills) கொண்டதாக உள்ளது. இந்நிலையில் அந்த திறன்கள் இல்லாமல் நம் குழந்தைகளை உருவாக்குவது, நாமே அவர்களை வீழ்த்துவதற்கு சமம்.

அதனால் பிரிட்டனில் உள்ள அனைத்து மாணவர்களும் 18-வயது வரை கணக்கு பாடத்தின் ஏதாவது ஒரு பிரிவை கட்டாயம் படிக்க சட்டம் இயற்றப்படும்.

உலகின் சிறந்த கல்வி அமைப்புகளை கொண்ட நாடாக இங்கிலாந்தை கொண்டு வரும் நோக்கத்தில் இந்த திட்டத்தை அரசு முன்னெடுக்க உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனது வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும் கல்வியின் மூலமே தொடங்கியது. ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தரமான கல்வியை வழங்குவது ரிஷி சுனக் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்கான மிக முக்கிய காரணமாக அமையும்.

சரியான திட்டமிடல் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள சிறந்த கல்வி முறைகளை நம்மால் எதிர்த்து நிற்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் ரிஷி சுனக் அறிவித்தபடி, பிரிட்டனில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 18 வயது வரை கணித பாடம் கட்டாயம் என்ற கொள்கை விவரங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.

மேலும் அவரின் இந்த முடிவுக்கு அந்நாட்டு மக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

மாணவர்களுக்கு ஏற்ப அதிகளவில் கணித ஆசிரியர்கள் இல்லாமல் அவரது திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், மாணவர்கள் அவர்களுக்கு பிடித்தமான கல்வியை கற்க ஊக்குவிக்க வேண்டும். மாறாக அவர்களிடம் அதனை திணிக்கக்கூடாது என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் பிரிட்டனின் கல்வித் தரம் உலக பிரசித்தி பெற்றது. பள்ளி முதல் கல்லூரி வரை பல்வேறு நிலைகளிலும் அங்கு கல்விக்காக சென்று சேருவோர் அதிகம்.

இந்தச் சூழலில், இங்கிலாந்து மாணவர்கள் பலருக்கும் கணக்கு பாடங்கள் சரியாக தெரியவில்லை என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா: பளார் என விட்ட பாட்டி!

காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *