கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் முதன்முறையாக மைதானத்தில் இறங்கி பேட்டிங் செய்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கடுமையான விபத்தில் சிக்கினார். அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ரிஷப் பந்த்க்கு, தசைநார் மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
விபத்து காரணமாக இந்தாண்டு நடைபெற்ற அனைத்து வகை போட்டிகளில் இருந்து அவர் பங்கேற்க முடியாமல் போனது.
அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கிய வீரரான அவர் இல்லாதது பல்வேறு போட்டிகளிலும் எதிரொலித்தது. பந்த் இல்லாத நிலையில், அனுபவம் இல்லாத கே.எஸ்.பாரத் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்பட்டனர்.
எனினும் கடந்த ஜுன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது பந்த் அணியில் இல்லாதது ரசிகர்களால் மிகவும் உணரப்பட்டது.
இதற்கிடையே தொடர்ந்து சிகிச்சை பெறும் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினமான நேற்று(ஆகஸ்ட் 15) விபத்துக்கு பிறகு முதன்முறையாக மைதானத்தில் புகுந்து ரசிகர்கள் முன் பேட்டிங் செய்தார்.
பெங்களூரு JSW விஜயநகரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பந்த் பேட்டிங் செய்ய வந்தபோது அங்கு பெருமளவில் ரசிகர்கள் கூடினர்.
https://twitter.com/IsraqueAhamed/status/1691688790535069959?s=20
மேலும் லாங்-ஆஃப் நோக்கி ஒரு லாஃப்ட் ஷாட்டை அடித்து நொறுக்கியபோது ரசிகர்கள் மைதானத்தை சுற்றி நின்று ஆரவாரம் செய்தனர்.
இதனை ரசிகர் ஒருவர் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட தற்போது ரிஷப் பந்த் பேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
’பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட பெண் மீதான வழக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!
’நீட்’டை எதிர்த்து போராட உதயநிதிக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்