விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படிக்கட்டில் நடைப்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அவருடைய வலது முழங்காலில் தசை நார் கிழிந்து இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ரிஷப் பண்ட் நடந்து முடிந்த ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் ரிஷப் பண்ட் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வீட்டிற்கு வெளியில் நடைப்பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், விரைவில் குணமடைந்து வர வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.
தொடர்ந்து இன்று அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் படிக்கட்டில் ஏறிச் செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இரண்டு வெவ்வேறு தினங்களில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ தொடக்கத்தில் படிக்கட்டில் ஏறும் போது ரிஷப் மிகவும் சிரமப்படுகிறார்.
ஆனால் மற்றொரு நாள் படிக்கட்டில் மிகவும் சாதாரணமாக ஏறி வருகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட ரிஷப் “அவ்வளவு மோசமாக இல்லை. எளிமையான விஷயங்கள் கூட சில நேரம் கடினமாகிவிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விரையில் குணமடைந்து வாருங்கள் (get well soon) என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா
நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: நாளைக்கு ஒத்திவைப்பு!