ஆழ்ந்த தூக்கத்துக்கு நல்ல தலையணையும் முக்கியம். உங்கள் தலையை உங்கள் முதுகுத்தண்டுடன் சீரமைத்து, உங்கள் கழுத்தை நன்றாகத் தொட்டுக் கொள்ளும்படியான தலையணையைத் தேர்வு செய்வது அவசியம். குறிப்பாக… அதிகம் குண்டாகவும் இல்லாமல் நடுத்தரமான, போதுமான உயரத்தில் தலையணை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு…
மல்லாந்து உறங்குபவர்கள் தங்கள் தலையை முதுகுத்தண்டுக்கு இணையாக வைக்க நடுத்தர உயர தலையணை தேவை.
பக்கவாட்டில் தூங்குபவர்கள் தலையை வளைக்காமல் வைப்பதற்கு உயரமான, குண்டான தலையணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குப்புறத் தூங்குபவர்கள் மெல்லிய தலையணைக்குச் செல்ல வேண்டும் அல்லது தலையணையை முழுவதுமாகக் கைவிட வேண்டும்.
ஒரு நல்ல தலையணை என்பது நீங்கள் புதைமணலில் மூழ்குவதைப் போல உள்ளே இழுத்துச் செல்லக் கூடாது. சிறிது எதிர் அழுத்தத்தை, சிறிய அளவிலான எதிர்ப்பை அளிக்க வேண்டும்.
தூக்க நிலையில் ‘காம்பினேஷன் ஸ்லீப்பிங்’ (Combination sleeping) என்ற வகை ஒன்று உண்டு. இத்தகையவர்கள் ஒரே நிலையில் இரவு முழுவதும் தூங்க மாட்டார்கள். தூக்கத்தின் நிலை மாறிக் கொண்டேயிருக்கும். இவர்கள் மிதமான உறுதி கொண்ட தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் மெத்தையைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் முதுகுத்தண்டின் இயற்கையான வளைவை உறுத்தாததாக, மிகவும் கடினமாக இல்லாததாகப் பார்த்துக் கொள்வது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்: அப்டேட் குமாரு
மீண்டும் தமிழகம் வரும் மோடி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!