முடி உதிர்தல் பிரச்சினைக்கும் பீர்க்கங்காய் நிவாரணம் தரக்கூடியது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்… பீர்க்கங்காயில் உள்ள இரும்புச்சத்து முடி உதிரும் பிரச்சினையை சரிசெய்யும். வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை பீர்க்கங்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வர பலனை உணர முடியும்.
பொதுவாக நீர்க்காய்களான சுரைக்காய், பூசணி, புடலங்காய், முள்ளங்கி போன்றவற்றை சமைக்கும்போது, சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். நீர்க்காய்களை முன்கூட்டியே நறுக்கி வைத்து உலரவிடாமல், சமைப்பதற்கு சற்று முன்னர் நறுக்கிக்கொள்ளலாம். மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்காமல், முடிந்தவரை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குவது நல்லது.
அந்த வகையில் உடலுக்குத் தேவையான பல சத்துகளைக் கொண்ட பீர்க்கங்காயைக் கூட்டு, பொரியல், சாம்பார் எனச் சமைத்துச் சாப்பிடலாம். பீர்க்கங்காயைத் தோல் நீக்கி அரைத்து, இட்லி, தோசை மாவுடன் சேர்த்தும் சமைத்துச் சாப்பிடலாம். இதன் மூலம், பீர்க்கங்காயை விரும்பாத குழந்தைகளின் உணவிலும் இதைச் சேர்த்துவிட்டால் நல்ல முடி வளர்ச்சியைப் பெற முடியும்.
முக்கியமாக முடி உதிர்தலைத் தடுக்க… பீர்க்கங்காய் – 1, எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – சிறிதளவு, சீரகத்தூள் – சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். பீர்க்கங்காயைத் தோல் சீவி, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். வடிகட்டி எடுக்கவும். இத்துடன் தேவையான அளவு எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து அப்படியே குடிக்கலாம். தேவையெனில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு ஒருமுறை அருந்தினால் முடி உதிர்தலைத் தடுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் வேட்டையன் டிரைலர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : தேங்காய் வெல்ல லட்டு
துரைமுருகன் திடீர் துபாய் பயணம்… ஏன்?
அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அட்மிட்!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கம்… பின்னணி இதுதான்!