நம் வீட்டு சுப நிகழ்ச்சிகளிலும் பண்டிகைக்கால பலகாரங்களிலும் காலை உணவிலும் முக்கிய இடம்பிடிக்கும் வடை, மழைக்காலத்துக்கும் ஏற்ற சிற்றுண்டி. சத்தான இந்த ரிச் வடை செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
என்ன தேவை?
கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு – தலா அரை கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
வேகவைத்த ஸ்வீட் கார்ன் – கால் கப்
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சோள ரவை (மொறுமொறுப்புக்கு) – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பை ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். பருப்பு களுடன் சோம்பு, உப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அந்தக் கலவையுடன் சோள ரவை, வெங்காயம், வேக வைத்த ஸ்வீட்கார்ன் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெற்றிலை கஷாயம்
சண்டே ஸ்பெஷல்: நீரிழிவாளர்களுக்கு பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசிதான் நல்லதா?