குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை அணியின் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களின் வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே சிஎஸ்கே அணியின் வெற்றியை வெறித்தனம்..வெறித்தனம் என்ற விஜய்யின் பாடலுக்கு ஏற்றார் போல் கொண்டாடிய ரசிகர்களின் வீடியோவை இங்கே காணலாம்…
இந்த வீடியோவில் உள்ள ரசிகர் சென்னை அணியின் வெற்றிக்காக காத்திருக்கிறார். அந்த அணி வெற்றி பெற்றதை அறிந்த உடன் மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்களுடன் விடுதியில் தங்கி இருக்கும் இவர் அங்கு உள்ள கதவுகளை உணர்ச்சிவசப்பட்டு தட்டி தன்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார்.
ஓம் சக்தி. சமயபுரத்து மகமாயி… ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா… என்று கூறிக்கொண்டு சென்னை அணியின் வெற்றிக்காக கடவுளிடம் வேண்டுதல் வைத்தபடி விளையாட்டை பார்த்து ரசித்த மற்றொரு ரசிகரின் வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
இந்த காணொளியில் இருப்பவர் வேறு யாரும் இல்லை சென்னை அணி வீரர் தீபக் சாஹர் தான். வெற்றிக்கு பின் ஓட்டல் அறையில் அவரின் கொண்டாட்டம்.
மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி
திக் திக் நொடிகள்..கடைசி பந்தில் கலக்கிய ஜடேஜா