வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோடைக்காலத்தில் ஏற்படும் கண் நோய்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கண் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கண் நோய்கள் குறித்து பேசியுள்ள கண் மருத்துவர்கள், “கோடைக்காலத்தில், உலர்விழி, கண் அழற்சி, புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன. கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது உலர் விழி பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
தற்போது இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. இதனால் அசுத்தமான கைகளால் கண்களைத் தொடக்கூடாது. சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கும்.
இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம். கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கும் இயற்கை பானங்களை அருந்த வேண்டும். செல்போன்கள், கம்ப்யூட்டர் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : புடலங்காய் ராய்த்தா
இது ‘கச்சத்தீவு’ டைவர்சன் : அப்டேட் குமாரு
Thalaivar 171: படத்தின் ‘டைட்டில்’ இதுதானா?… ரொம்ப ‘பழசா’ இருக்கே!