ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி புதிய வருடாந்திர ரீ-சார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) சுதந்திர தினத்துக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைவிட இந்த ஆண்டு (2023) சுதந்திர தின சிறப்பு சலுகைகளின் பலன்கள் வித்தியாசமாக உள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தின சலுகைக்காக ரூ.2,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
மேலும் ஸ்விக்கியில் ரூ.249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ.100 தள்ளுபடி. யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி. யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு 15 சதவிகிதம், அதிகபட்சம் ரூ.4,000 வரை தள்ளுபடி. ஏஜியோ தளத்தில் ரூ.999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ.200 தள்ளுபடி. ரூ.999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மேட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி. ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்வு செய்யப்பட்ட ஆடியோ பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ராஜ்
மஞ்சள் நிறப் பேருந்துகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!
அரையிறுதி: வெற்றி முனைப்பில் இந்தியா