நம் அன்றாட வாழ்கையில் இண்டர்நெட் பெரும் பங்காற்றி வருகிறது, இண்டர்நெட் இல்லாத நாளை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
பல்வேறு பிராட்பேண்ட் சேவைகள் இருந்தாலும், ஜியோ மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றதாகவே இருந்து வருகிறது.
ஜியோ பைபர் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இதன் அடுத்த கட்டமாக ஜியோ ஏர்பைபர் இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது புதிய இணைய சேவையான ஜியோ ஏர்பைபர்-ஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இது பிரத்யேகமாக வீட்டு பொழுது போக்கு, ஸ்மார்ட் ஹோம் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஏர்பைபர் முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே என 8 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜியோ பைபர் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கி வந்த நிலையில், ஜியோ ஏர்பைபர் 1.5ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கும் எனவும், இதனால் வீடியோ கான்பிரன்ஸ், ஆன்லைன் கேம் மற்றும் வீடியோக்களை நல்ல தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோ ஏர்பைபர் இணைய சேவையை பெற அறிமுகம் செய்யப்பட்ட நகரமா என்பதை தெரிந்து கொண்டு, ஜியோ இணையதளம் மூலம் அல்லது வாடிக்கையாளர் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.
இந்த இணைய சேவையை பெறுவதற்கு தேர்வு செய்யும் பிளான் மற்றும் இன்ஸ்டலேஷன் தொகையை மட்டும் செலுத்தினால் போதும், அதைத் தாண்டி எந்த தொகையும் செலுத்தத் தோவையில்லை.
பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி வைஃபை ரூட்டர், 4k ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் மற்றும் குரல் ஆக்டிவேட் ரிமோர்ட் உள்ளிட்ட வீட்டு சாதனங்களுக்கு ஜியோ ஏர்பைபர் இணைய சேவையை பேறலாம்:
60008-60008 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து அல்லது வாட்சாப் செய்து இணைப்பு தொடர்பான தகவலை பெறலாம், www.jio.com என்ற இணையதளம் மூலம் மற்றும் அருகில் உள்ள ஜியோ ஸ்டோரை அணுகி பதிவு செய்யலாம்.
பதிவு செய்த இடத்திற்கு இணைய சேவை தொடங்கியதும் ஜியோ உங்களை தொடர்பு கொள்ளும்.
ஜியோ ஏர்பைபர் வேகமாக இணைய சேவையுடன் கூடிய 6 ஏர்பைபர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை ஏர்பைபர் மற்றும் ஏர்பைபர் மேக்ஸ் என இரண்டாக பிரித்துள்ளது.
ஏர்பைபர் திட்டத்தின் கீழ் 3 விதமான விலையில் இணைய சேவை கிடைக்கும், ரூ.599, ரூ.899, ரூ.1199 விலையில் மூன்று திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் 100எம்பிபிஎஸ் வரையிலான இணைய தரவு , 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்களுக்கான அணுகல் மற்றும் Netflix, amazon prime மற்றும் jio cinema premium உள்ளிட்ட 14 OTT பயன்பாடுகள் போன்ற நன்மைகள் அடங்கும்.
ஏர்பைபர் மேக்ஸ் திட்டத்தில் ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999 போன்ற விலைகளில் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் 1ஜிபிபிஎஸ் வரையிலான இணைய தரவு, 550 க்கும் டிஜிட்டல் சேனல்களுக்கான அணுகல் மற்றும் Netflix, amazon prime மற்றும் jio cinema premium உள்ளிட்ட 14 OTT பயன்பாடுகள் போன்ற பலன்களை வழங்குகின்றன. குறிப்பிடத்தக்க வகையில் தேர்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஜியோ ஏர்பைபர் மேக்ஸ் கிடைக்கும்
பவித்ரா பலராமன்
பாஜக கூட்டணி… எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா? வேலுமணி பதில்!
கொரோனா குமார் பட வழக்கு: சிம்பு பதில் மனுத்தாக்கல்!
மகளிர் மசோதா: கனிமொழி எழுப்பும் கேள்விகள்!