redmi 13 c series
மக்கள் மத்தியில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்ற ரெட்மி தற்போது 13C வரிசை ஸ்மார்ட் போனை இந்தியாவில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. Redmi 13C ஸ்மார்ட் போன் ஆனது ஏற்கனவே நைஜீரியாவில் அறிமுகமாகியிருக்கும் நிலையில் இந்திய மார்கெட்டிற்கு வர தயாராகியுள்ளது.
4G LITE மற்றும் 5G ஆகிய இண்டு வேரியண்ட்களில் அறிமுகமாக உள்ளது. மூன்று விதமான ஸ்டோரேஜ், 5G நான்கு நிறங்களிலும், 4G LITE இரண்டு நிறங்களிலும் விற்பனைக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இதன் விலையானது ரூ.15,000 இருந்து துவங்கலாம்.
வெளியாகும் வேரியண்ட்டுகள்:
1.4GB ரேம், 128GB ஸ்டோரேஜ்
2. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ்
3. 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ்
Redmi 13C 4G LITE
கிடைத்த தகவல்களின்படி Redmi 13C 4G LITE ஆனது ஆன்ராய்டு 13 அடிப்படையில் உருவாக்கப்பட்ட MIUI 14 ஓஎஸ் மற்றும் MediaTek Helio G85 ப்ராசசர் கொண்டிருக்கும். 6.74 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா, 8 மெகா பிக்சல் செல்பி கேமரா போன்றவை இடம்பெறும். 18 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்ட 5000 mAh பேட்டரி மற்றும் ஸ்டார் டஸ்ட் ப்ளாக், ஸ்டார் ஷைன் கிரீன் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
Redmi 13C 5G
Redmi 13C 5G-ஐ பொருத்தவரை MediaTek’s Dimensity 6100+ ப்ராசசர் கொண்டிருக்கும். 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறும் போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியாகும் நிறங்கள் பற்றிய தகவல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான் தெரியவரும். இந்த Redmi 13C 5G ஆனது 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் என்ற ஒரு வேரியண்ட்டில் மட்டும் அறிமுகமாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பவித்ரா பலராமன் redmi 13 c series
ஸ்டூடியோ கிரீன் பேரே இல்ல?… வைரலாகும் பருத்திவீரன் சென்சார் சர்டிபிகேட்!