அட்டகாசமான அம்சங்களுடன் ‘Redmi 13 5G’: விலை இவ்வளவு தானா?

டிரெண்டிங்

ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம், தனது புதிய ‘Redmi 13 5G’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் ஸ்நாப்டிராகன் 4 Gen 2 AE சிப்செட் பொருத்தப்பட்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகமாகியுள்ளது.

ரெட்மி 13 5G விலை

ரெட்மி 13 5G 2 வகையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதில், 6GB ரேம் மற்றும் 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.13,999 என்ற விலையிலும், 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.15,499 என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

அமேசான் மற்றும் ஜியோமி தளங்களில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 12 அன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு என 3 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரெட்மி 13 5G சிறப்பம்சங்கள்

2 சிம் வசதி கொண்டு அறிமுகமாகியுள்ள இந்த ரெட்மி 13 5G, ஆண்ட்ராய்டு 14 உடனான ஜியோமியின் HyperOS கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 4 Gen 2 AE ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

6.79-இன்ச் FHD+ (1,080×2,400 பிக்சல்கள்) அளவிலான எல்.சி.டி திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட திரை அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும், ‘வெட் டச் டிஸ்பிளே’ வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என 2 பின்புற கேமராக்களை இந்த ரெட்மி 13 5G கொண்டுள்ளது. மேலும், 3x இன்-சென்சார் ஜூம், ரிங் பிளாஷ், ஆட்டோ நைட் மோட் என பல கேமரா அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்புறத்தில் செல்ஃபிக்களுக்காக 13 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

5030mAh அளவிலான பிரம்மாண்ட பேட்டரியை கொண்டுள்ள இந்த ரெட்மி 13 5G ஸ்மார்ட்போன், 33W டர்போசார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது.

3.5mm ஆடியோ ஜேக் வசதி, சைட் பிங்கர்-பிரிண்ட் ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராகிறாரா டிராவிட்?

விக்கிரவாண்டி தேர்தல்: முதல் ஆளாக வாக்களித்த அன்னியூர் சிவா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *