தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு, மூன்று வாரங்களில் பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்குச் சத்தான, சுவையான இந்த சிவப்பு அரிசி இடியாப்பம் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் சாப்பிடும்போது நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு ஸ்பூன் நெய் (விருப்பப்பட்டால்) ஊற்றி, நன்றாகக் கலந்து சாப்பிட கொடுக்கலாம். இதை கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
என்ன தேவை?
சிவப்பு பச்சரிசி மாவு – ஒன்றரை கப்
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – முக்கால் கப்
சர்க்கரை – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கிலோ சிவப்பு பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர வைக்கவும். அரிசி நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் அல்லது மாவு மில்லில் கொடுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒன்றரை கப் மாவை எடுத்துக்கொள்ளவும். இனி அதனுடன், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, மிதமான சூட்டில் உள்ள நீரை விட்டு மாவை கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.
ஆனால், கையில் ஒட்டக்கூடாது. பி்றகு, இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு இட்லித் தட்டில் மாவை பிழிந்துவிட்டு 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்கினால் சுவையான சிவப்பு அரிசி இடியாப்பம் தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கேரட் மில்க் ஷேக்!
கிச்சன் கீர்த்தனா : சீஸ் பால்ஸ்!
குளுகுளு சென்னை: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்… 9 ’மாவட்டங்கள்’ எதிர்ப்பு! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?