ஹெல்த் டிப்ஸ்: கோடையில் ஏற்படும் திடீர் வயிற்றுவலிக்கு காரணம் இதுதான்!

Published On:

| By Selvam

வயிற்று வலியை உணராத மனிதர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு பலருக்கும் பலவித காரணங்களால் வயிற்றுவலி ஏற்படும். அதுவும் கோடையில் திடீர் வயிற்றுவலியால் பாதிக்கப்படுபவர்கள் அநேகர்.

இரைப்பை புண்ணாக இருப்பதுதான் திடீரென வரும் வயிற்றுவலிக்கான முதல், முக்கிய காரணம். இதை ‘ஹைப்பர் அசிடிட்டி’ (Hyperacidity) என்று சொல்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். அதாவது, “வயிற்றில் கோடைக்காலத்தில் அமிலம் அளவுக்கதிகமாகச் சுரப்பது. கடந்த சில பல ஆண்டுகளாக நம்முடைய உணவுப்பழக்கம் வெகுவாக மாறிவிட்டது. வெளி உணவுகளைச் சாப்பிட்டு, அந்தத் தாக்கத்தில் வீட்டிலும் காரம், புளிப்பு, மசாலா, எண்ணெய் தூக்கலாகச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட விரும்புகிறோம். தவிர, நேரம் தவறியும் சாப்பிடுகிறோம். இதுதான் கோடையில் ஏற்படும் ஹைப்பர் அசிடிட்டி பிரச்னைக்கான மூல காரணம்” என்கிறார்கள்.

மேலும், “நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும்போதுதான் நாம் பசியென உணர்கிறோம். உடனடியாக நாம் உணவருந்தாவிட்டாலோ, தண்ணீர் குடித்து அந்த அமிலச் சுரப்பை நீர்க்கச் செய்யாவிட்டாலோ அதுவே வயிற்றுவலியைக் கிளப்பலாம். சிறுநீர்ப்பாதையில் ஏதேனும் பிரச்சினையோ, தொற்று பாதிப்போ இருந்தாலும் அது திடீர் வயிற்றுவலியாக உணரப்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களுக்கும் திடீரென தாக்கும்.

வயிற்றுவலி வராமல் தடுக்க சரியான உணவுப்பழக்கம்தான் அடிப்படை. கோடைக்காலத்தில் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காரம், உப்பு, மசாலா, புளிப்பு குறைவான உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. செயற்கையான நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படும் சைவ, அசைவ உணவுளை அறவே தவிர்ப்பது சிறந்தது.” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்

LSGvsGT : தொடர்ந்து 3வது வெற்றி… யாஷ் பந்துவீச்சில் சுருண்டது குஜராத் அணி!

2வது இடம் வந்துட்டேன் பாத்தியா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel