டென்ஷனான நேரத்திலும் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்போதும் வயிற்றைக் கலக்கி, பேதி ஆவது ஏன்? உணர்வுகளுக்கும் வயிற்றுக்கும் தொடர்பு உண்டா? இந்தப் பிரச்சினையை எப்படிக் கட்டுப்படுத்துவது? இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் விளக்கம் என்ன?
“நம் உணர்வுகளுக்கும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. இதற்கு ‘கட் பிரெயின் ஆக்சிஸ்’ (Gut-Brain Axis ) அல்லது ‘கட் பிரெயின் கனெக்ஷன்’ (Gut-Brain Connection) என்று பெயர். கோபமோ, சந்தோஷமோ, ஆதங்கமோ, ஸ்ட்ரெஸ்ஸோ… எந்த உணர்வானாலும் அது வயிற்றை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணத்துக்கு, நீங்கள் கோபமாக இருக்கும்போது வயிற்றுவலி ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்படுவது தொடங்கி, அல்சர் பாதிப்பு வரை உங்கள் செரிமான மண்டலத்தைப் பல விதங்களில் பாதிக்கலாம். குறிப்பாக, ஸ்ட்ரெஸ் இருக்கும்போது வயிற்றைக் கலக்கி பேதி ஆவதாக பலரும் சொல்வதுண்டு. இது ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ பாதிப்புக்குக்கூட காரணமாகலாம். இது விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, நம் குடல் இயக்கத்தையும் செரிமான மண்டலத்தையும் சீராக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால், கோபத்தையும் ஸ்ட்ரெஸ்ஸையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும். வேளாவேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்சினைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன.
பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாய்வு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக் கூடாது. சுயமாக மருத்துவமும் பார்த்துக்கொள்ளக் கூடாது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஆண்களும் ஜொலிக்கலாம் அழகாக!
டாப் 10 நியூஸ் : பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் விநாயகர் சிலை கரைப்பு வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சிறுதானியங்களில் சமைக்க சிரமப்படுகிறீர்களா?
ஆட்சி அதிகாரத்தில் பங்கு : விசிக – திமுக கூட்டணியில் முறிவா?: திருமாவளவன் பதில்!