ரியல்மீ நிறுவனம் தனது புதிய நார்சோ 70 ப்ரோ 5G ஸ்மார்ட்போனை, இன்று (மார்ச் 19) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமரா, 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், பிரீமியம் டிசைன், சிறந்த திரை, ஏர் கெஸ்சர்ஸ் என பல எண்ணற்ற வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மீ நார்சோ 70 ப்ரோ விலை என்ன?
ரியல்மீ நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில், 8GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.18,999 என்ற விலையிலும், 8GB ரேம் + 256GB சேமிப்பு கொண்ட வகை ரூ.19,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பச்சை, தங்கம் என வண்ணங்களில் பயனர்களுக்கு கிடைக்க உள்ளது.ரியல்மீ நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான ஏர்லி பேர்டு விற்பனை இன்று மாலை 6 மணிக்கே துவங்கிவிட்ட நிலையில், ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 22 அன்று அமேசான் மற்றும் ரியல்மீ தளங்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ.2,299 மதிப்புள்ள பட்ஸ் டி300 ப்ளூடூத் இயர்போன் இலவசமாக வழங்கப்படும் எனவும் ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், ஐசிஐசிஐ மற்றும் எச்.டு.எஃப்.சி கார்டுகள் மூலம், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரியல்மீ நார்சோ 70 ப்ரோ சிறப்பம்சங்கள் என்ன? realme narzo 70 pro 5g
ரியல்மீ UI 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 மென்பொருள் அமைப்பு கொண்டு இயங்கும் ரியல்மீ நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனில், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
ஹொரைசன் கிளாஸ் டிசைனுடன் ஒரு ப்ரீமியம் லுக்கில், இந்த ரியல்மீ நார்சோ 70 ப்ரோ அறிமுகமாகியுள்ளது. அப்படியான இந்த ஃபோன் 6.67-இன்ச் fHD+ AMOLED திரை, 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், 2,000 நிட்ஸ் ஒளிரும் திறன் போன்ற திரை அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும், 2,200Hz தொடுதல் மாதிரி விகிதத்துடன், மழைநீர் ஸ்மார்ட் டச் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், திரையின் மீது நீர் இருந்தாலும் கூட அதன் டச் திறன் தடையின்றி செயல்படும்.
ரியல்மீ நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமாகியுள்ளது. முதலாவதாக, இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX890 OIS சென்சார் கொண்ட 50 MP முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த விலை பிரிவில், இந்த வகை சென்சார் பொருத்தப்பட்ட ஒரே ஸ்மார்ட்போன் நார்சோ 70 ப்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக, 8 MP அல்ட்ரா-வைட் அங்கிள் கேமரா மற்றும் 2 MP மேக்ரோ கேமரா என மேலும் 2 கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிக்களுக்கு முன்புறத்தில் 16 MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனில் ஏர் கெஸ்சர்ஸ் என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காற்றில் உங்கள் கைகளின் அசைவுகளை கொண்டே ஸ்மார்ட்போனை நீங்கள் இயக்கலாம். ஸ்வைப், கிளிக், ஸ்கிரீன்-ஷாட், ஷார்ட் வீடியோ எடுப்பது போன்ற 10-க்கும் மேற்பட்ட வசதிகளை இந்த ‘ஏர் கெஸ்சர்ஸ்’ மூலமே பெறலாம்.
கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை, இந்த ரியல்மீ நார்சோ 70 ப்ரோ 5000mAh என்ற பெரிய பேட்டரியுடன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலூர் திமுக பொருளாளர் அசோகன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!
கண்ணாடியோடு கூட்டணி பேச்சு: அப்டேட் குமாரு
realme narzo 70 pro 5g