உலக சந்தைகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட, ரியல்மி GT NEO 3T மொபைல் போன் இன்று (செப்டம்பர் 16) மதியம் 12.30 மணியளவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், 6 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் விலை ரூ.29,999-க்கும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைலின் விலை ரூ.31,999-க்கு ம், 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைலின் விலை ரூ.33,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 23-ஆம் தேதி விற்பனை செய்யப்படும் நிலையில், முதல் நாளன்று செல்போன் வாங்குபவர்களுக்கு ரூ.7,000 ஆஃபர் அறிவித்துள்ளது.

ரியல்மி GT NEO 3T மொபைல் போனின் சிறப்பம்சங்கள் :
6.62 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை கொண்டுள்ளது.
5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 80w பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ்

64 எம்.பி பிரைமரி சென்சார், 8 எம்.பி அல்ட்ரா வைல்டு லென்ஸ், 2 எம்.பி மைக்ரோ கேமரா என, ட்ரிபில் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்பிக்கும் வீடியோ கால் அழைப்புகளுக்கும், 16 எம்.பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி முதல் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
டேஷ் எல்லோ, டிரிஃப்டிங் ஒயிட், ஷேட் பிளாக் நிறங்களில் இந்தியாவில் ரியல்மி GT NEO 3T மொபைல் போன் அறிமுகமாகி உள்ளது.
செல்வம்