பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ரியல்மி தன்னுடைய அடுத்த மாடலான ரியல்மி 12எக்ஸ் 5G -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. இந்த ஸ்மார்ட் போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ரியல்மியும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறை சற்று கூடுதல் அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ரியல்மி 12எக்ஸ் 5G ஸ்மார்ட் போன்.
சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகப் போகும் இந்த ஸ்மார்ட் போன் பற்றிய தகவல்கள், தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.
ரியல்மி 12எக்ஸ் 5G ஸ்மார்ட் போன் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்:
*IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளது.
*5G, ஜிபிஎஸ், வை-பை, ப்ளூடூத் 5.2, என்எப்சி போன்ற ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது.
டூயல் சிம் பயன்படுத்த முடியும்.
*45W பாஸ்ட் சார்ஜிங் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மற்றுமொறு சிறப்பம்சம் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 50 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.
*மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 ப்ளஸ் சிப்செட் கொண்டிருக்கும்.
ஃபேஸ் அன்லாக் மற்றும் சைடு மவுண்ட் ஃபிங்கர் பிரிண்ட் வசதி இருக்கும்.
*ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆன்ராய்டு 14 ஆபரேட்டிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளது.
*12GB ரேம் 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் 512GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.
டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது 50MP ப்ரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமரா.
*8MP செல்பி கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் உள்ளது. 12GB வரை விர்ச்சுவல் ரேம், ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இடம்பெற்றுள்ளது.
*இத்தனை அம்சங்களைக் கொண்ட இந்த ரியல்மி 12எக்ஸ் 5G (Realme 2X 5G) ஸ்மார்ட் போன் ரூ.15,000 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சிக்கல்!
20 யூனிட் ரத்தம்…ஸ்டாலின் கவலை…கணேசமூர்த்திக்கு என்னதான் நடந்தது?
Rain Update: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?