ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதியானது, `விநாயகர் சதுர்த்தி’ எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 7 அன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அன்று முழு முதற்கடவுளான விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகச் செய்து படைப்போம். அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகச் செய்து அசத்த இதோ உங்களுக்கான ரவை ஸ்வீட் கொழுக்கட்டை ரெசிப்பி.
என்ன தேவை?
ரவை – ஒரு கப்
சர்க்கரை – முக்கால் கப்
துருவிய தேங்காய் – அரை கப்
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – ஒரு கப்
எப்படிச் செய்வது?
ரவையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையுடன் சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, இறக்கி ரவை பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி வேகவிடவும். அது வேகும் வரை அப்படியே மூடி வைக்கவும். சர்க்கரை கரைந்து ரவையுடன் சேர்ந்து ரவை கால் பாகம் வெந்திருக்கும். இத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். ஆறியவுடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்துஎடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: புதினா ஓமப்பொடி!
கிச்சன் கீர்த்தனா: தாமரை விதை கீர்!
பியூட்டி டிப்ஸ்: பாஸ்மதி ரைஸ் சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?
‘தி கோட்’ – மோகன் ரீ இன்னிங்ஸ் ஆக அமையுமா ?