நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பான் இந்தியா அளவில் வலம் வரும் ராஷ்மிகா மந்தனா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவர் நேற்று (மே 16) விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராஷ்மிகாவுடன் ரசிகர்கள் போட்டோ எடுப்பதற்காக அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அவருக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவலர்கள் ரசிகர்கள் சிலரை தள்ளிவிடும் போது ராஷ்மிகா தடுத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ராஷ்மிகா பாதுகாவலர்களுக்கு மத்தியில் நடந்து செல்லும் போது ரசிகர்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க சூழ்ந்து கொள்கின்றனர்.
அப்போது ஒரு ரசிகர் மொபைல் போனில் செல்ஃபி எடுக்க வரும் போது, ராஷ்மிகா சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். ஆனால் ராஷ்மிகாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த ரசிகரை தள்ளிவிடுகிறார்.
அதற்கு ராஷ்மிகா பதுகாவலரிடம் “நோ கவனமாக இருங்கள்” என்று சொல்கிறார். தொடர்ந்து, ரசிகை ஒருவர் செல்ஃபி எடுக்க ஓடி வருவதை கவனித்த ராஷ்மிகா நின்று அவருடன் செல்ஃபி எடுத்து கொள்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்: 5 மாவட்டங்களில் கனமழை!
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு!