புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலுக்கு சுட்டி குழந்தை நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா மந்தனா அந்தக் குழந்தையை சந்திக்க தான் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ், கன்னடா உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது.
இப்படத்தில் பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, உள்ளிட்டோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சுகுமார் இயக்கிய இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
ஊ சொல்றியா மாமா, ஸ்ரீவள்ளி, சாமி சாமி உள்ளிட்ட பாடல்களுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய அளவில் சென்றடைந்தது.
சாமி சாமி பாடலுக்கு பள்ளியில் படிக்கும் சுட்டி குழந்தைகள் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தது.
அதில் ஒரு குழந்தை ஆடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த புஷ்பா பட கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, “இந்த நாள் மகிழ்ச்சியாகி உள்ளது.
இந்தக் குழந்தையை பார்க்க நான் ஆசைப்படுகிறேன். எப்படி இந்த குழந்தையை சந்திப்பது?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, யார் இந்த சுட்டி குழந்தை என்று அனைவரும் தேடி வருகின்றனர்.
செல்வம்
செல்லப்பிராணியால் தயாரிப்பாளர்களுக்குச் செலவு வைக்கிறேனா?: ராஷ்மிகா மந்தனா