அயோத்தியில் ராமர்: டிரெண்டிங்கில் ராவணன்

Published On:

| By christopher

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று (ஜனவரி 22) வெகு விமரிசையாக நடைபெற்றது. 51 அங்குல உயர குழந்தை ராமர் சிலை பிரதமர் மோடி முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருந்து ரஜினிகாந்த், தனுஷ் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், சாதுக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழா அனைத்தும் நேரடியாக சமூகவலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், எக்ஸ் தளத்தில் #RamJyoti #JaiShreeRaam #HareRama #AyodhaRamMandir #RamaRajya போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டன.

அதேவேளையில் தமிழ்நாட்டில் ராவணனை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியினரால் #TamilsPrideRavanaa என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.

இந்த ஹேஷ்டேக் இதுவரை 25 ஆயிரம் முறை பதிவிடப்பட்டு இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அயோத்தி ராமர் கோயில் : சொன்னதை செய்த ‘ஹனுமான்’ படக்குழு!

பர்ஸ்ட் மாமா இப்போ பெரியப்பா… மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel