ரக்‌ஷா பந்தன் : பிரதமர் வாழ்த்து, பெண்களுக்கு இலவச பயணம்!

டிரெண்டிங்

இந்தியா முழுவதும் (ஆகஸ்ட் 11) இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரக்‌ஷா என்ற சொல்லின் பொருள் பாதுகாப்பு. பந்தன் என்ற சொல்லின் பொருள் ரத்த பந்தம். ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சியானது இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. மதம் சார்ந்த நிகழ்ச்சியாக இதனை பார்க்காமல்,அனைத்து மதத்தினரும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.

alt="raksha bandhan wishes"

ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து, அவர்களது கையில் ராக்கி கயிறு கட்டி, இனிப்புகளை ஊட்டி விடுவார்கள். சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்குவார்கள்.

கிருஷ்ணர் ஒருமுறை காத்தாடி விட்டுக்கொண்டிருக்கும்போது, நூல் அவரது கையை கிழித்து விடுகிறது. இதனால் கிருஷ்ணரின் கையில் ரத்தம் வழிகிறது. இதனைக் கண்ட திரவுபதி தனது சேலையைக் கிழித்து கிருஷ்ணரின் கையில் கட்டுப் போட்டுவிடுகிறார்.

திரவுபதியின் அன்பைக் கண்ட கிருஷ்ணர் தனது தங்கையாக அவரை ஏற்றுக்கொள்கிறார் என்று மகாபாரத கதைகளில் ரக்‌ஷா பந்தன் பற்றிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

alt="raksha bandhan wishes"

ரக்‌ஷா பந்தன் ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் . ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மட்டுமல்லாது, அறிமுகம் இல்லாத சகோதரர்களுக்கும், காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் ராக்கி கயிறு கட்டிவிடுவார்கள்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று இரவு 12மணி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 12 மணி வரை 18 மணி நேரத்திற்கு பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு அறிவித்துள்ளார்.

செல்வம்

மு.க.ஸ்டாலினை அண்ணா என அழைத்த தேஜஸ்வி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *