இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 11) ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தனையொட்டி, பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து, அவர்களது கையில் ராக்கி கயிறு கட்டி, இனிப்புகளை ஊட்டிவிட்டு கொண்டாடி வருகின்றனர். சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்குகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, தனது அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் மற்றும் ஓட்டுநர்களுடைய குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை கொண்டாடினார்.
குழந்தைகள் பிரதமருக்கு ராக்கி கயிறு கட்டி விடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

அதுபோன்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயா ஒருங்கிணைப்பாளர் பீனா, டாக்டர். முத்துலெட்சுமி, விஜயலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் ரக்ஷா பந்தனை முன்னிட்டு முதல்வருக்கு ராக்கி கயிறு கட்டினார்கள்.
செல்வம்
குடியரசுத் துணைத்தலைவரானார் ஜெகதீப் தன்கர்