ஐபோனில் ரஜினி… உருகிய மகள் ஐஸ்வர்யா

டிரெண்டிங்

உலகளவில் ஆப்பிள் ரக ஐ போன்களுக்கு இருக்கும் வரவேற்பு வேறு எந்த போன்களுக்கும் கிடையாது. அதிநவீன வசதிகளுடன் வெளிவரும் ஆப்பிள் ஐபோன்களை காத்திருந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி அன்று அமெரிக்காவில் ஐபோன் 14 ரக மாடலை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ‘டிம் குக்’ அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸ் போன்கள் விற்பனைக்கு வந்தது.

இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனைக்கு வந்ததில் இருந்தே அதனை வாங்கிய பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா இணைந்துள்ளார்.

ஐபோனில் கூல் ரஜினி!

தான் புதிதாக வாங்கிய 14 ப்ரோ மேக்ஸ் ஐபோனில் தன் தந்தை ரஜினி அவரது செல்போனை கூலாக பார்த்தபடி இருக்கும் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

அதில், “இந்த புகைப்படத்திற்கு ஃபில்டர் தேவைப்படாது. எந்த குறையும் இருக்காது. இந்த ஃப்ரேம் ஒருபோதும் தவறாக போகாது. இந்த முகத்தினை தவறான ஆங்கிலில் புகைப்படம் எடுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படம் #iphone14promax இல் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

லேட்டஸ்டாக நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தற்போது ரஜினியின் அடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை அழகாக கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பொன்னியின் செல்வன் : நிறைவேறாத ஜெயலலிதா விருப்பம், ரஜினிகாந்த் ஆசை!

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0