நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆகஸ்ட் 2 முதல் 15ஆம் தேதி வரை தேசியக்கொடியை ப்ரோஃபைலாக வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்று மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களின் டிபி-யில் தேசியக்கொடியை வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் ப்ரோஃபைலில் தேசியக்கொடியை இன்று (ஆகஸ்ட் 11) வைத்துள்ளார்.
ஆளுநரை சந்தித்ததன் மூலம் தமிழக அரசியலில் கடந்த இரு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி. இந்நிலையில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று இன்று டிபியை மாற்றியுள்ளார்.
முன்னதாக, மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி தங்களது டிபியில் தேசியக்கொடியாக மாற்றியிருந்தனர். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் தனது டிபியை மாற்றியுள்ளார்.
செல்வம்
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்!