கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ்!
ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், இந்த ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.
என்ன தேவை?
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
மசூர் பருப்பு – அரை கப்
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
பச்சைப்பட்டாணி, கேரட், பீன்ஸ் கலவை – ஒரு கப்
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை – தலா 2
இஞ்சி-பூண்டு விழுது, சீரகம்,
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – இரண்டரை கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா, மஞ்சள்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், பருப்பு, அரிசி, தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும். இதில் சூடான நீர் இரண்டரை கப் விட்டு, மிதமான தீயில் மூடி வேகவிடவும். முந்திரியை வறுத்துத் தூவவும். கொத்தமல்லித்தழைத் தூவி ரைத்தாவுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லதா?
கிச்சன் கீர்த்தனா: ரஷ்யன் சாலட்!
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லையே… அப்டேட் குமாரு
மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!