மழைக்காலம் என்றாலே மந்தமான நிலைதான். இந்த நாள்களில் வைப்ரன்ட் அல்லது பிரைட் நிறங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், புத்துணர்வான தோற்றத்தைப் பெறலாம். மழையில் நனைய நேர்ந்தால், லைட் கலர் அசௌகர்யமான தோற்றம் தரும் என்பதால் தவிர்த்து அடர் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதேபோல சேறு, சகதியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், லைட் அல்லது வெளிர் நிறங்களைத் தவிர்ப்பது பெட்டர். காற்று சுழற்சி அதிகமுள்ள காட்டன் மெட்டீரியலை நிச்சயம் உபயோகிக்கக் கூடாது. காற்று சுழற்சி அதிகமில்லாத, அதே சமயம் உடுத்துவதற்கு எளிமையாக இருக்கும் சிந்தடிக், சாட்டின், ஜீன்ஸ் போன்ற மெட்டூரியல்களைத் தேர்வு செய்யலாம்.
ஹேண்ட்பேக்ஸ், க்ளட்ச் இப்படி எந்த வகை பையாக இருந்தாலும், ஜூட், லெதர் போன்ற மெட்டீரியல்களை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். அதேபோல, அதிக அளவு வண்ணங்கள் நிரம்பியிருக்கும் பைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஈரப்பதம் அதிகம் இருக்கும் காரணத்தால், பையிலிருக்கும் சாயம் கசிந்து ஆடைகளில் ஒட்டிக்கொள்வதற்கான சாத்தியம் அதிகம். எனவே, மழை தினங்களில் மார்க்கெட்டில் பரவலாகக் கிடைக்கும் வெளிர் வண்ண வாட்டர்ப்ரூஃப் பேக்குகளை உபயோகிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2026க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை : திமுகவின் மாஸ்டர் திட்டம்!
கங்குவா விமர்சனம் : அன்றைக்கு அமீர்கான் இன்றைக்கு சூர்யா
மகாராஷ்டிராவிலும் பானை- விசிக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து : விக்னேஷ் மீது டாக்டர் ஜாக்குலின் மோசஸ் புகார்!