சென்னை மாநகர பேருந்து மேற்கூரையிலிருந்து உள்ளே பயணிக்கும் பயணிகள் மீது மழை நீர் கொட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில் கடந்த இரு நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் இரு நாட்களுக்குக் கன மழை இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அலுவலகத்துக்கு செல்வோர் கடும் மழையில் சிரமத்திற்கு மத்தியிலே செல்ல வேண்டியுள்ளது.
இந்தசூழலில் மாநகர பேருந்து ஒன்றிற்குள் மழை கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
வண்டலூரிலிருந்து பிராட்வே செல்லும் 21g பேருந்தில், மேற்கூரையிலிருந்து கொட்டும் மழை நீரில் நனைந்தபடியே பயணித்துள்ளனர்.
ஜன்னல்களும் சரிவர மூட முடியாததால் அனைத்து பக்கமும் சாரல் அடித்து மக்கள் சிரமத்துடன் பயணிக்கு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கான தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட பாடலில் இடம் பெற்ற,
வறண்டு கிடக்கும் பூமிக்குள்ள, புது ஊத்து ஒண்ணு பொறக்குதம்மா மனசு நெரம்பிச் சிரிக்குதம்மா” என்ற வரிகளுடன் எடிட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிரியா
ராமஜெயம் கொலை: 11 ரவுடிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!
ராகுலுடன் ரோஹித் வெமுலாவின் தாய் நடைபயணம்!