மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (நவம்பர் 13) நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் ராகுல் காந்தி டிரம்ஸ் இசைத்து அசத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழகத்தில் ஒற்றுமை நடைபயணத்தை துவங்கினார்.
தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நடைபயணம் செய்த ராகுல் காந்தி, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் செய்து வருகிறார்.

ராகுல் காந்தி இதுவரை 66 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று நடைபயணத்திற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மறைந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சதவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கலம்நுரி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய இசையான ட்ரம்ஸ் இசைக்கப்பட்டது.
அப்போது மேடை ஏறிய ராகுல் காந்தி, டிரம்ஸ் இசைத்த இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசிக்க முயற்சி செய்தார். அவரது அருகில் இருந்த மற்ற கலைஞர்கள் வாசிப்பதை பார்த்து ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்தார். இதனால், இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் ராகுல் காந்தி இசைக் கலைஞர்களை கட்டியணைத்து கை குலுக்கினார்.
ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்வம்