rahul gandhi ladakh bike ride

டியூக் 390 அட்வென்ச்சரில் பைக் ரெய்டு சென்ற ராகுல் காந்தி

டிரெண்டிங்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பைக் ரெய்டு சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  நேற்று லடாக்கில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் உள்ளூர் மக்களுடன் ராகுல் காந்தி கால்பந்து விளையாடினார்.

தொடர்ந்து லடாக்கில் உள்ள சுற்றுலா தலமான பாங்காங் ஏரிப்பகுதியில்  ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வழிபாடு  நடத்த உள்ளார். இதற்காக ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 19) பாங்காங் ஏரிப்பகுதிக்கு பைக் பயணம் மேற்கொண்டார்.

 

இன்று பைக் ரெய்டு சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “உலகின் மிகவும் அழகான இடம் என்று என் தந்தை கூறிய பாங்காங் ஏரிக்கு செல்லும் வழியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி டியூக் 390 KTM அட்வென்ச்சர் பைக்கில்  ரெய்டு சென்ற  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் பாங்காங் ஏரி  அமைந்துள்ளது. இந்த ஏரி பகுதியை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றமான சூழல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மோனிஷா

என்னது அண்ணாமலை பிரதமரா?

உலக புகைப்பட தினம்: ஸ்டாலின் எடுத்த போட்டோ கிளிக்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0