கால்சியம், இரும்புச்சத்து, கனிமச்சத்துகள் அடங்கியுள்ள இந்த கேழ்வரகு கீரை அடை, இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கேற்ற சிறப்பு உணவாகும். இதை இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷாலாக செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
கேழ்வரகு மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – கால் கப்
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க…
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பச்சரிசி மாவு இவற்றுடன் உப்பு கலந்துவைத்து அதில் தேவையான அளவு தண்ணீர்விட்டு நீர்க்கக் கரைத்து 20 நிமிடங்கள் வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்து கிளறி சூடான தோசைக்கல்லில் தோசையாக ஊற்றியும் எடுக்கலாம். கெட்டியாக கரைத்து அடைபோல தட்டியும் எடுக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை சாதம்!
கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு
அது கதை இல்லயாம் நெசமாம் : அப்டேட் குமாரு