சாமி சாமி பாடல்: வைரலில் ரஷ்ய பெண்கள் நடனம்!
புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலுக்கு ரஷ்ய பெண்கள் நடனம் ஆடுவது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா – தி ரைஸ்’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம், பெரும் வெற்றி பெற்றதுடன் வசூலையும் வாரிக் குவித்தது.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘சாமி சாமி’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இப்பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஈர்த்ததுடன், பிரபலங்கள் முதல் குட்டீஸ் வரை எனப் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ‘புஷ்பா’ படம் ரஷ்ய மொழியில் வருகிற 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதற்கான டிரைலர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று (டிசம்பர் 1) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.
இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ’சாமி சாமி’ பாடல் ரஷ்யா நாட்டிலும் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/Cli_jz5Dv2B/
அங்கு இப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அப்பாட்டுக்கு ரஷ்ய பெண்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர்கள் மாஸ்கோவில் உள்ள ரெட் சதுக்க அருங்காட்சியகத்தின் முன் இப்பாடலைப் பாடி ஆடுகின்றனர்.
இந்த வீடியோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, வைரல் பட்டியலில் இணைந்துவிட்டது. இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “மிக அருமையான நடனம்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
உலகக்கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி
திகட்டாத அழகு.. நச் போஸ் கொடுத்த தமன்னா.. தவிக்கும் ரசிகர்கள்..