கிச்சன் கீர்த்தனா: பூசணி அப்பம்

Published On:

| By Selvam

தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவான அப்பம், அரிசி மாவு, தேங்காய்ப் பால் கலந்து செய்யப்படுகிறது. இந்த அப்பத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்கீற்று சேர்த்து செய்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்க உதவும். குழந்தைகளின் குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

என்ன தேவை?

வெள்ளைப் பூசணிக்கீற்று – ஒன்று
தேங்காய் – ஒரு மூடி
வெல்லம் – 300 கிராம்
அரிசி மாவு – ஒரு டம்ளர்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பூசணிக்கீற்றை நன்கு கழுவித் துடைத்து, துருவிக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பூசணித் துருவலை சுருள வதக்கிக்கொள்ளவும். ஆறிய பின் அரிசி மாவையும் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். வெல்லத்தை சிறிது இளம் சூடான நீரில் கரைத்து, வடிகட்டவும். கரைத்த வெல்லத்துடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் – அரிசி மாவு – வதக்கிய பூசணி கலவையை சேர்த்து அப்பத்துக்கு கரைப்பது போல கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இந்த அப்ப மாவை சிறிய கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

கார அப்பம் செய்ய வேண்டும் என்றால், தேங்காயுடன் 3 அல்லது 4 பச்சை மிளகாய்,  ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்து அரைத்துக்கொண்டு… வதக்கிய பூசணி, அரைத்த தேங்காய் விழுது, அரிசி மாவு, உப்பு, கால் கப் புளித்த தயிர் விட்டு கரைத்து, மாவை அப்பமாக பொரித்து எடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்

கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி

டிஜிட்டல் திண்ணை:  தலைமைச் செயலகத்தில்  துணை முதல்வர் ரூம் ரெடி…   உதயநிதியின் செயலாளர் யார்? ஐஏஎஸ் போட்டி!

புரட்டாசில லட்டு சாப்பிடக்கூடாதா?: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share