மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீஸ் அங்கு விரைந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார்.
அப்போது, அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். இதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதில், இம்ரான் என்ற நபர், “இது ஒரு படப்பிடிப்பு” என்று கூறியுள்ளார். சுபி என்பவர், பொது வெளியில் இப்படியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
”அவர்கள் இந்தியாவை மேற்கத்திய நாடாக மாற்ற முயல்கிறார்கள், மாற்றம் வரவேண்டும் என்பது நல்ல விஷயம், ஆனால் போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது நல்லதல்ல” என்று சத்யன் என்ற நபர் கருத்து தெரிவித்து உள்ளார்.
காதல் ஜோடியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
70 வயதில் பீமரத சாந்தி திருமணம் செய்த நடிகர் செந்தில்
உதயா மகனோடும் ஒன்றாய் இருப்பேன்: சட்டமன்றத்தை உருக வைத்த துரைமுருகன்