ஹெல்த் டிப்ஸ்: பிரபலமாகும் புரோட்டீன் பவுடர்… நல்லதா, கெட்டதா?

டிரெண்டிங்

“இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும், “நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம்.

சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தைப் பெறலாம்.

இயற்கையாக உற்பத்தியாகும் உணவைச் சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு, பைட்டோகெமிக்கல் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும்.

புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை.

செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவை நாம் சாப்பிடவும் முடியாது.

பொதுவாக, புரதச்சத்துப் பானம் என்பது புரதச்சத்துக் குறைவு (Protein energy malnutrition) ஏற்பட்ட குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் பரிந்துரை செய்யப்படும் பானம்.

சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரோட்டீன் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு.

இவர்களுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஜிம்முக்குப் போகிறவர்களுக்கு மற்றவர்களைவிடப் புரதச்சத்து கூடுதலாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அப்படிப்பட்டவர்கள் தகுந்த அளவுடன், மற்ற ஊட்டச்சத்துகளும் உடலில் சேருவது பாதிக்கப்படாமல் உட்கொள்ள வேண்டும்.

இது சத்துபானம்தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தைப் பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதயநோய்க்குப் பாதை அமைக்கும். கல்லீரல் நோய்க்கு அடிபோடும்.

ஜிம்முக்குச் செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியன் தாத்தாவால் கூட பேச முடியாத ஊழல் : அப்டேட் குமாரு

சீன எல்லையில் உள்ள கிராமங்களுக்கு 4G!

தலைமை செயலகம் : விமர்சனம்!

”நாளை முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படும்” : சித்தராமையா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *