குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ஆகும்.
சமையல் ப்ளஸ் காமெடி என்ற கான்செப்டில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதம் குக் வித் கோமாளி 5வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.
இந்த முறை குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக இருந்த மணி மேகலை போட்டியாளராக இருந்த பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியில் வெளியேறினார். சுயமரியாதை முக்கியம் என்றும் மணிமேகலை குறிப்பிட்டிருந்தார். இருவரின் மோதலும் இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி வெற்றியாளராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி 5 வது சீசனின் டைட்டிலை வென்ற பிரியங்கா தேஷ்பாண்டே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”என்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதுமே நல்ல முறையில் உணர வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தோல்வி அடைந்தேன், ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு குக் வித் கோமாளியின் கோப்பை என்னை அங்கீகரித்துள்ளது. சமையலறையில் என் திறமைகளை மெருகேற்ற உதவிய பயிற்சியாளர்களுக்கு நன்றி” என்றும் கூறியுள்ளார்.
மேலும், என்னை ஊக்கப்படுத்தி என்னை சிறந்த சமையல்காரராக மாற்றிய அனைவருக்கும் நன்றி, எனக்கு நான் மட்டுமே போட்டியாளர் என்றும் பதிவிட்டு மறைமுகமாக மணிமேகலையை தாக்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்… வழக்கை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!
விஜயின் ‘தி கோட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!