ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள நடிகை பிரியா பவானி சங்கர் ஹெலிகாப்டரிலிருந்து ஸ்கை டைவிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர்.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், யானை என்று வெற்றி படங்களில் நடித்தார். தற்போது வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
இதனால் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தொடர்ந்து பத்து தல, இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இதனால் நாளுக்கு நாள் பிரியா பவானி சங்கர் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தப் புகைப்படங்களை பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெலிகாப்டரிலிருந்து ஸ்கை டைவிங் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், தனது காதலருடன் ஹெலிகாப்டரில் இருக்கும் பிரியா பவானி சங்கர், பைலட் ஒருவர் உதவியுடன் ஸ்கை டைவ் செய்கிறார்.
தொடக்கத்தில் மிகவும் பயத்துடன் காணப்பட்ட பிரியா பவானி சங்கர் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார். இந்த வீடியோவை பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்
ரூ.100 கோடி சாதனை : தடை பல கடந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்!