தாராவி குடிசைப் பகுதியில் இருந்து சர்வதேச மாடலாக மாறியுள்ள 14 வயது சிறுமி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
மும்பை தாராவி பகுதியில் இருக்கும் குடிசை பகுதியில் வாழ்பவர்கள் வறுமையில் மட்டுமல்லாது வாழ்க்கை குறித்த கனவுகளுடன் இருப்பார்கள். அந்த கனவுகளுக்கு உண்மையான உருவத்தைக் கொடுத்து 14 வயதே ஆகும் மலிஷா கார்வா பலரையும் வியப்படையச் செய்துள்ளார்.
தாராவி குடிசைப்பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போட்டி நடத்திய ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் குடிசைகளின் இளவரசியாக மலீஷா கார்வா என்ற சிறுமியைத் தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து மலீஷா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானார்.
தற்போது இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் இருக்கின்றார்கள். மலீஷா தற்போது ஒரு சர்வதேச அழகு சாதன பொருளின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் என்ற காஸ்மெடிக் பிராண்டின் `தி யுவதி கலெக்ஷன்’ என்ற ஆயுர்வேத அழகு பொருளுக்காக மலீஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு இளம்பெண்ணின் கனவு பயணம் தொடங்கி விட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
விளம்பர தூதராக மலீஷா நியமிக்கப்பட்ட பிறகு அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 14 வயதே ஆகும் மலீஷாவின் வாழ்க்கை பயணம் வாழ்க்கை குறித்த கனவு மற்றும் இலட்சியங்களோடு இருக்கும் பல இளம் பெண்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது.
மலீஷா இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முன்னதாக மாடலிங் போட்டோஷுட் மற்றும் “live your fairytale” என்ற குறும்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
மோனிஷா
’சவால் விடும் காட்சி சிறப்பாக வர சரத்பாபுவே காரணம்’: உண்மையை பகிர்ந்து ரஜினி உருக்கம்!
பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி!